வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு கூடுதல் கண்காணிப்பு
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக் கண்காணிப்பு. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 256 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட வந்த சூழ்நிலையில் தற்போது மேலும் 8 CCTV கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் , மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.