நீலகிரியில் கூடுதல் வழிகாட்டி பலகைகள் அமைப்பு

நீலகிரியில் கூடுதல் வழிகாட்டி பலகைகள் அமைப்பு

வழிகாட்டி பலகைகள் 

சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் கூடுதலாக வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஆண்டு தோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் 70 சதவீத சுற்றுலா பயணிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், சொந்த வாகனங்களில் வருகின்றனர். இதனால் வெறும் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட துரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.

இதனால் உள்ளூர் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடிவதில்லை. சுற்றுலா பயணிகளும் சுற்றுலாத்தலங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் இந்த கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறது. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் சாலை ஓரம் நின்று வழி கேட்கின்றனர். ஒரு சிலர் கூகுள் மேப் பயன்படுத்தினாலும், உள்ளூர் தேவைக்காக ஒரு வழி பாதையாக மாற்றப்படுவது அவர்களுக்கு தெரிவதில்லை.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இப்பிரச்னையை தீர்ப்பதற்காக நீலகிரி மாவட்ட போலீஸார் சாலையின் முக்கிய சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா தளங்களின் பெயர்கள் அடங்கிய வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக செல்ல முடியும் போக்குவரத்து நெரிசிலும் குறையும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

Tags

Next Story