நீலகிரி; கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் !
கூடுதல் வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்தநிலையில் நீலகிரி தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் நோட்டா சின்னத்திற்காக கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட வேண்டி உள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் இருந்து கூடுதலாக 240 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, ஊட்டி கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் கட்டிடத்தில் வைக்கப்பட்டது. கடந்த 6- ந்நேதி பெல் நிறுவனத்தின் பொறியாளர்களால் முதல்நிலை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இன்று 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல் பணியிகள் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அருணா தலைமை தாங்கினார். இதில் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டு தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.
இதன் பின்னர், மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், முதற்கட்ட சீரற்ற மயமாக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட கூடலூர் (தனி), குன்னூர், ஊட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
இதில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கவுசிக், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ஆர்.டி.ஓ.க்களுமான மகராஜ், சதீஷ், செந்தில்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பு அலுவலர் தமிழ்மணி, தேர்தல் தாசில்தார் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.