மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர்: சாலை மறியல் போராட்டம்

சலைமரியலில் ஈடுபட்ட விவசாயிகள்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பயிர்கள் தண்ணீரின்றி பல்வேறு இடங்களில் கருகி வருகிறது.
ஆகவே தண்ணீரின்றி கருகும் பயிரை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி சாட்டியக்குடி கடைத்தெரு பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எம்.என்.அம்பிகாபதி தலைமையில் நடைபெறும்.
சாலை மறியல் போராட்டத்தில் மேட்டூர் அணையில் ஏற்கனவே திறக்கப்பட்ட இரண்டு டிஎம்சி தண்ணீருடன் சேர்த்து கூடுதலாக 4 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். குறுவை பாதிப்புக்கு அறிவிக்கப்பட்ட ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 13,500 இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனால் கீழ்வேளூர் கச்சனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கட்சியின் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன்,மாவட்ட குழு உறுப்பினர் ஏ.சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
