பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
X

பைல் படம் 

குமரி மாவட்டத்தில் பெய்துள்ள மழையால், அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்திலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மலையோர பகுதிகளிலும் மழை இருந்தது. இந்த மழை காரணமாக அணைகளுக்கான நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 246 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 47.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 221 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் பெருஞ்சாணி அணைக்கு 91 கன அடி தண்ணீர் தான் வந்தது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் தான் திறந்து விடப்பட்டது. தற்போது மழை பெய்ததாலும், சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளதால் சானல்களில் அதிகளவில் தண்ணீர் தேவை என்பதாலும், வைகாசி விசாக திருவிழாவுக்காக கோயில் தெப்பக்குளங்களில் தண்ணீர் நிரம்ப வேண்டும் என்பதாலும் பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

Tags

Next Story