ஜம்புத்தீவு பிரகடனம் கடைபிடிப்பு

ஜம்புத்தீவு பிரகடனம் கடைபிடிப்பு

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் ஜம்புத்தீவு பிரகடனம் கடைபிடிக்கப்பட்டது.


அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் ஜம்புத்தீவு பிரகடனம் கடைபிடிக்கப்பட்டது.

சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் ஜம்புத்தீவு பிரகடனம் நாள் கல்லூரி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இப்போர் தினத்தை நினைவு கூறும் விதமாகவும், போராட்டத்தில் வீரர்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையிலும், மருதுபாண்டியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கணேசன் மற்றும் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி தமிழ்துறை இணை போராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் மருது சகோதரர்களின் விடுதலை போராட்ட பங்களிப்பை குறித்து பேசினர். விழாவில் துறையை சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலபணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், ஜெயபாலன் மற்றும் அல்போன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story