ஆதிதிராவிட நலப்பள்ளி சாரணர்களுக்கான பயிற்சி முகாம்

ஆதிதிராவிட நலப்பள்ளி சாரணர்களுக்கான பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

விழுப்புரம் மாவட்ட ஆதி திராவிட நலப் பள்ளிகளைச் சார்ந்த சாரண, சாரணியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆதி திராவிட நலப் பள்ளிகளைச் சார்ந்த சாரண, சாரணியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாரண, சாரணிய இயக்கத்தினைச் சீரிய முறையில் செயல்படுத்திட, விழுப்புரம் மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பாக ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர்கள் மணி, சக்கரவர்த்தி, பயிற்சி ஆணையர் துளசிங்கம், துணைச் செயலர் இராம்குமார், பண்டகக் காப்பாளர் மேல்காரணை சங்கர் மற்றும் பயிற்சி அமைப்பு ஆணையர்கள் அகிலா மற்றும் செல்வம் முகாம் பயிற்சி கருத்தாளர்களாக செயல்பட்டனர். இம்முகாமில் வழுதரெட்டி, கொந்தமூர், புளிச்சப்பள்ளம், பொம்பூர், கப்பூர் மற்றும் வி. சாலை ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 120 சாரணர்களும், 6 சாரண ஆசிரியர்களும் பங்கேற்றனர். பயிற்சியின் நிறைவு விழாவிற்கு உதவி ஆணையரும், பள்ளித் தலைமையாசிரியர் கோவிந்தன் தலைமை தாங்கினார்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின், ஆதி திராவிட நலத் துறையின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கலிவரதன் சிறப்புரை நிகழ்த்தி, சாரணர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்ட மேனாள் ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறை நல அலுவலர் சிவபாலன் மற்றும் பொம்பூர் பள்ளித் தலைமையாசிரியர் இராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, செயலர் மணி அனைவரையும் வரவேற்றார். முடிவில் துணைச் செயலர் இராம்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story