மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் மனு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்குபாளையம் பகுதியில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் , இப்பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய மாரியம்மன் கோவில் இருப்பதாகவும் , இதில் தற்போது குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் உள்ளே வந்து வழிபடவும் , தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வர அனுமதிக்காத நிலை நீடித்து வருவதாகவும் , அதற்கு தடையாக கோவிலுக்கு முன்பாக தீண்டாமை வேலி அமைக்கப்பட்டிருப்பதாகவும் , எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீண்டாமை வேலியை அகற்றி அனைத்து சமூகத்தினரும் கோவிலுக்குள் சென்று வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொங்குபாளையம் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Tags

Next Story