ஆதிதிராவிடர் மாணவர் விடுதி துவக்க விழா

X
ஆதிதிராவிடர் மாணவர் விடுதி துவக்க விழா
தற்காலிக ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை தொடங்கி வைத்தார் இராஜேஸ்குமார் எம்.பி. மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார்.
தற்காலிக ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இராஜேஸ்குமார் எம்.பி திறந்து வைத்தார் நாமக்கல் மாவட்டம், இராசாம்பாளையத்தில் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் தற்காலிக விடுதி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு விடுதியை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத் தலைவர் பழனிவேலு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
