ஆதிதிராவிடர் நலத்தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

ஆதிதிராவிடர் நலத்தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

ஆண்டு விழா

நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஆதிதிராவிடர் நலத்தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி பெரியகண்ணமங்கலம் ஆதிதிராவிடர் நலத்தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார்.வருவாய் ஆய்வாளர் சுந்தர்வளவன் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி ஆசிரியர் கலா வரவேற்றார். இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் பரிசுகள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் அருண் ஆண்டு அறிக்கையை வாசித்தார். இதில் உதவி ஆசிரியை விஜிலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story