காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

ஆதிசங்கரர்  

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
ஆதிசங்கரரின் ஜெயந்தி விழாவையொட்டி,காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனை செய்து,வழிபாடு செய்தார். தொடர்ந்து மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை செய்து வழிபாடு செய்தார். இதில், சங்கர மடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, நிர்வாகி கீர்த்திவாசன் மற்றும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story