சி.வி சண்முகம் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

சி.வி சண்முகம் மீதான  அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் எம்.பி. மீதான அவதூறு வழக்குகளின் விசாரணை வருகிற 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் பஸ் நிலையம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசையும், முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலிலின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியம், தனித்தனியாக வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும் இம்மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இந்த 3 வழக்குகளின் விசாரணையையும் வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story