அங்கித் திவாரி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அங்கித் திவாரி
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த 2023 டிச. ஒன்றாம் ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில் அங்கித் திவாரி தரப்பில் நீதிமன்றத்தில் கையொப்பமிடுவதிலிருந்து விலக்கு கோரி, திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 2-ஆவது முறையாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி மனு மீதான விசாரணையை ஏப்.26-ஆம் தேதிக்கு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெ.மோகனா ஒத்தி வைத்து உத்தரவிட்டாா்.