சி.வி.சண்முகம் மீதான விசாரணை ஒத்திவைப்பு

சி.வி.சண்முகம் மீதான விசாரணை ஒத்திவைப்பு
எம்.பி சி.வி சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் கடந்த 1.5.2023 அன்று அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறை வாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு தொடர்பான சம்மன் இன்னும், சி.வி.சண்முகம் எம்.பி.க்கு கிடைக்கப் பெறாததால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. தொடர்ந்து, வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன், இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story