தபால் துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
ஒத்திவைப்பு
மார்ச் 22 நடைபெற இருந்த தபால் துறை குறைதீர்ப்பு நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தபால் கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தபால் துறை சார்பில் வருகிற 22- ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று பட்டுக்கோட்டை தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற இருந்த காலாண்டு தபால் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story