அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் விதியை மீறி செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபி நாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோக நாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இது வரை 33 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 26 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சி யம் அளித்துள்ளனர். தொடர்ந்து, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, கோதகுமார், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர் கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.