டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு

அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு

சீர்காழியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை (கடையின்:5752) அமைந்துள்ளது. இந்த அரசு மதுபான கடையால் இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அச்சத்துடனே கடந்து செல்வதாக கூறி மதுபான கடையை மாற்ற கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம பொதுமக்கள் கடையை இடம் மாற்ற கோரி சாலை மறியல் மற்றும் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளரும் ராஜ்குமார் டாஸ்மார்க் மேலாளர் உள்ளிட்டோர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் அப்பொழுது பிப்ரவரி மாதத்திற்குள் கடையை இடமாற்றம் செய்வதாக கூறினார் இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

தற்பொழுது 2 மாதம் ஆகியும் அரசு மதுபான கடை இடமாற்றம் செய்யப்படாததால் இன்று பூட்டு போடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.இன் நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெனிடா மேரி வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் சௌந்தரபாண்டியன் கூறுகையில், மாவட்ட ஆட்சியரிடம் கடையை மாற்ற கோரி அனுமதி பெற்று நாளை முதல் வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இப்பணியின் போது எந்தவித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என கிராம பொது மக்களின் சார்பில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

Tags

Next Story