இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு
ஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் விழுதியூர் ஊராட்சியில் விழுதியூர் மாணவர்களும் பொதுமக்களும் தற்போது 15 கிலோமீட்டர் சுற்றி அம்மாபேட்டைக்கு வர வேண்டி உள்ளது இந்த நிலையில் ஐவேலிதோட்டத்தில் வெண்ணாற்றில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது இதன் வழியாக வெண்ணாற்று கரையில் சாலை அமைத்தால் மாணவர்களும் பொதுமக்களும் 5 கிலோ மீட்டர் தூரத்தில் அம்மாபேட்டை வந்தடைய முடியும் பல ஆண்டுகளாக பாதை இல்லாமல் இருக்கும் சுடுகாட்டிற்கும் பாதை அமைந்துவிடும் எனவே வெண்ணாற்று கரையில் சாலை அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று அம்மாபேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இரா. இராஜன்,மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி எப்.டி .விஜய்,தலைமையிலும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே. வி.கலைச்செல்வன் முன்னிலையிலும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் எம். இளவரசு ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். திருநாவுக்கரசு விழுதியர் கிராமவாசிகள் கே. துரைராஜ்,எஸ் சாம்பசிவம்,பி. முருகானந்தம்,எம் செல்வம்,கே. சரவணன்,ஆர்.முருகையன்,ஏ.கணபதி, வி. முருகையன்,கே. ரவி,ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இச்சாலையை மூன்று மாதங்களுக்குள் நபார்டு திட்டம்,முதலமைச்சரின் கிராம சாலை திட்டம் ,அல்லது வேறு சிறப்பு திட்டத்திற்குக்குள் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்ததின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது