வாகன ஏலம் ஒத்திவைப்பு - எஸ்பி அறிவிப்பு

வாகன ஏலம் ஒத்திவைப்பு - எஸ்பி அறிவிப்பு

எஸ்பி ஹர்ஷ் சிங்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் நாளை நடக்க இருந்த வாகன ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட எஸ்பி ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 152 வாகனங்களை வருகிற 18.03.2024ந் தேதி பொது ஏலம் விடப்படுவதாக கடந்த 13.03.2024ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் 18.03.2024ந் தேதி நடைபெற இருந்த வாகன பொது ஏலம் ரத்து செய்யப்படுகிறது. வாகன ஏலம் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்

Tags

Next Story