மாணவர் சேர்க்கை தொடக்கம்

மாணவர் சேர்க்கை தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.


நாகப்பட்டினம் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இன்று (22.05.2024) துவக்கி வைத்தார். இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. 10 ضيح வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். 10ம் வகுப்பு மதிப்பெண் தவிர்த்து NTSE என்ற தேசிய திறனறிவுத்தேர்வு. NMMS எனப்படும் தேசிய வருவாய் வழித்தேர்வு, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் மாதிரிப்பள்ளிகளில் சேருவதற்குரிய தகுதியாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்டமாக பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 90 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2023-2024ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவில் 100 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சிப்பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story