மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 29ஆம் தேதி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 29ஆம் தேதி தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-2025 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29ஆம் தேதி புதன்கிழமை தொடங்கவுள்ளது. இதுகுறித்து அவர் கல்லூரி கூடுதல் பொறுப்பு முதல்வர் ஜமுனா ராணி அறிக்கையில் கூறியுள்ளதாவது, கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய துறைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை 29.05.2024 நடைபெறகிறது. . சிறப்பு ஒதுக்கீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவ படை வீரர்கள் முதலானோர் கலந்து கொள்வர்.
முதல் கட்ட கலந்தாய்வுகள், வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் துறைக்கு 10.06.2024 அன்றும், வணிக நிர்வாகவியல் மற்றும் கணிதவியல் துறைக்கு 11.06.2024 அன்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் துறைக்கு 12.06.2024 அன்றும் நடைபெறும். மேலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள், வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் துறைக்கு 24.06.2024 அன்றும், வணிக நிர்வாகவியல் மற்றும் கணிதவியல் துறைக்கு 25.06.2024 அன்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் துறைக்கு 26.06.2024 அன்றும் நடைபெறும். கலந்தாய்வுகள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் நடைபெறும். கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை அறையில் கலந்தாய்வுகள் நடைபெறும். மாணவிகள் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்திற்கு பெற்றோர்/ பாதுகாவலருடன் வருகை தர வேண்டும்.
கலந்தாய்விற்கு வரும் போது 10, +1, +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய சான்றிதழ்களின் அசல் (Original) மற்றும் நகல்கள் - 2 எடுத்து வர வேண்டும். வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தின் நகல் - 2 மற்றும் Passport size photo - 4 ம் கொண்டு வர வேண்டும். அனைத்து நகல் சான்றிதழ்களிலும் சான்றளிப்பு கையொப்பமுடன் (Attested) கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இத்துடன் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் செய்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் http://www.gasc-sathankulam.in வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.