அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் 

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் 
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை (பைல் படம் )
கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமாரி, பால்குளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 2024 - 25 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்ய மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையம் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சரோஜா கூறியதாவது:- மாணவர்களின் வசதிக்காக கல்லூரியில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாமாகவே www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பம் செய்யலாம். கன்னியாகுமரி பால்குளத்தில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎ ஆங்கிலம், பிகாம், பிபிஏ, பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் பிசிஏ கணினி பயன்பாடுகள் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு 28 - 5 - 2024 முதல் 30 - 5 - 2024 வரையும், பொது கலந்தாய்வு 10 - 6 - 2024 முதல் 15 - 6 - 2024 வரையும் நடைபெற உள்ளது என்றார்.

Tags

Next Story