சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை
மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2024-ஆம் ஆண்டில் மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் www.skilltraining.tn.gov.in இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்க்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி ஆகும், விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.50/-செலுத்த வேண்டும் . Debit Card/ Credit Card/ Net Banking/G-Pay ஆகியவற்றை பயன்படுத்தலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2024 ஆகும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் govtvpmdtad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மற்றும் 04146-294989 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.