அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம் 

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று திட்டச்சேரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கினார். திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் முன்னிலை வகித்தார். முன்னதாக திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல் பாசித் வரவேற்றார். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் அக்பர் அலி,மாவட்ட பொது செயலாளர் முகமது யாமின்,மாவட்ட செயலாளர் அபுஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினர். இதில் அதிமுக நகர அவைத் தலைவர் மன்சூர்ஷா,எஸ்.டி.பி.ஐ நகர தலைவர் நத்தர் ஒலி, நகர செயலாளர் தாரிக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சியின் புதிய அலுவலகத்தை கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி திறந்து வைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story