அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அஇஅதிமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் ஆலாம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நாமக்கல் மாவட்ட அஇஅதி முக செயலாளர் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் செந்தில் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு கலந்து கொண்டார். கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த 23 வாக்குசாவடிகள் காடச்சநல்லூர், பாப்பம்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், சமயசங்கிலி, ஓடப்பள்ளி, கொக்கராயன் பேட்டை, பாதரை, புதுப்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த 60 என 83 வாக்குசாவடிகளை சேர்ந்த தலா 19 என 1577 முகவர்களை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி யார் யாருக்கு என்னென்ன பணி என்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
