அ.தி.மு.க பிரச்சாரத்தில் பணம் தாராளம்

அ.தி.மு.க பிரச்சாரத்தில் பணம் தாராளம்

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் ரூ.50 போட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.


ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் ரூ.50 போட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பரமத்தி வேலூர் பகுதிகளில் நாமக்கல் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சு.தமிழ்மணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் பள்ளி சாலை,நல்லியாம்பாளையம்,மோகனூர் ரோடு,காவிரி சாலை,அண்ணாசாலை,திருவள்ளுவர் சாலை,சுல்தான் பேட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். வேலூர் சுல்தான் பேட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்மணிக்கு அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகி வரிசையில் நின்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் ரூ.50 போட்டார். இது தேர்தல் விதி மீரல் எனவும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் இவர்கள் மூது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story