கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 

பசிலியான் நசரேத் 

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் என அறிவிப்பு வெளியானது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு 4 முனைப்போட்டி உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் இந்த தொகுதியில் பசிலியான் நசரேத் என்பவர் போட்டியிடுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. குமரி மாவட்டம் கடியபட்டணம் மீனவர் கிராமத்தில் பிறந்த பசிலியன் தற்போது நாகர்கோவில் கீழராமன்புதூரில் வசித்து வருகிறார். 11-02- 1956-ல் பிறந்த இவர் எம். ஏ வரலாறு மற்றும் சமூக செயல்பாடுகள் பிரிவில் பி எச் டி பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், அரபி, ஜெர்மன் என 6 மொழிகள் தெரிந்தவர். கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் .முக்குவர் பிரிவை சேர்ந்தவர். துபாயில் மருத்துவ நிறுவனம் நடத்தி வருகிறார். உலகில் 84 நாடுகளுக்கு சென்றுள்ளார்.

அதே நேரம் அரசியலில் 38 ஆண்டுகள் தி மு க வில் இருந்த முக்கிய நிர்வாகி. திமுக மீனவர் அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தவர். இந்நிலையில், திடீரென கடந்த சில மாதம் முன்பு அதிமுகவில் இணைந்தார். ஒவ்வொரு தேர்தல்களிலும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு மனுதாக்கல் செய்யும் பசிலியானுக்கு சீட் கிடைக்காமல் போய்விடுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் தான் அவர் திமுக - வில் இருந்து விலகியதாக தெரிகிறது. அவரது எதிர்பார்ப்பின் படி, அதிமுக தற்போது அவரை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறக்கி உள்ளது.

Tags

Next Story