அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் !

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் !

அதிமுக

உடுமலைப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
உடுமலையில் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எஸ்.வி புரம் பகுதியில அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் , கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளர் கார்த்திகருப்பையாவை ஆதரித்து பேசிய வேலுமணி 2 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி அதிமுக என்றும், பாஜக போட்டி போட முடியாது என்றும் அவர்களின் வாக்கு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் பாஜக போட்டி இல்லை திமுக தான் போட்டி எனவும் கூறினார். அதிமுக ஆட்சியில் செய்த பணிகளை சுட்டிக்காட்டிய அவர் மூன்று வருட திமுக ஆட்சியில் எப்பணியும் மேற்கொள்ளவில்லை எனவும், திமுக சேர்ந்தவர்கள் ஓட்டு கேட்பதற்கு தகுதியே இல்லை எனவும் கூறினார்.

Tags

Next Story