அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

சேலம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் கோரணம்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டி கிராமத்தில் சேலம் பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கூட்டணி கட்சியின் வேட்பாளரான விக்னேஷ், வாக்கு சேகரிக்க வருகை தந்த போது அவருக்கு கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையில் அதிமுக மற்றும் தேமுதிக வினர் 500க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் உங்கள் பகுதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவேன் என்றும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story