அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு கோரிக்கை
வாக்கு சேகரிப்பு
அ.தி.மு.க.,வுக்கு மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என்று வேட்பாளர் குமரகுரு கோரிக்கை .
கள்ளக்குறிச்சி மாவட்டம் வளர்ச்சி பெற அ.தி.மு.க.,வுக்கு மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என்று வேட்பாளர் குமரகுரு கோரிக்கை விடுத்து பேசினார். கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி பேசியதாவது; தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். போதை பொருட்கள் புழக்கம் அதிகரிப்பால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை என மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். பொதுமக்கள் சிந்தித்து தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும். மேலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினருக்கு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story