அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் பவானிசாகரில் பிரச்சாரம்

பவானிசாகரில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவளக்குட்டை பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் பண்ணாரி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story