அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - திமுக வேட்பாளர்
திமுக வேட்பாளர் பிரகாஷ்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் முள்ளாம்பரப்பு , கனகபுரம் நல்லாந்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தின் போது மரக்கன்றை நட்டு வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் , அதிமுகவினர் முழுக்க முழுக்க தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் , ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார் அதிகளவில் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றார் . இந்த நேரம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால் இதுவரை தகுதிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை எனவும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர். ஏற்கனவே ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு சொந்தமான 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட சேலைகள் கைப்பற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று காங்கேயத்தில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் ரூ.31 லட்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த்து குறிப்பிடத்தக்கது.