நிர்வாகிகளை சந்தித்த அதிமுக வேட்பாளர் தமிழ்மணி

வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகிகள்



நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக செயல் வீரர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நாமக்கல்-சேலம் சாலையில் LMR தியேட்டர் பின்புறம் உள்ள அதிமுக நகர அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில், மாவட்ட பொருளாளர் TLS.காளியப்பன் தலைமை வகித்தார். நாமக்கல் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் மயில் கே.சுதந்திரம் முன்னிலை வகித்தார். நாமக்கல் நகரம், ஒன்றியம், புதுச்சத்திரம், மோகனூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் எஸ்.தமிழ்மணியை அறிமுகம் செய்து வைத்து முக்கிய நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக கட்சியினர் அனைவரும் வேட்பாளர் எஸ்.தமிழ்மணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன் பின்னர் வேட்பாளர் தமிழ்மணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் துண்டு அணிவித்து அவர்களின் பொறுப்புகளை ஆர்வத்துடன் கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.




