சேலம் மாவட்டம், மேட்டூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம், மேட்டூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

மேட்டூரில் அதிமுக வேட்பாளர் அசோகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக மருத்துவர் அசோகன் இன்று மேட்டூர் கொளத்தூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாசிலாபாளையம் |மூலக்காடு, கண்ணாமூச்சி, கோவிந்தபாடி, கொத்தூர்சந்தப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். வேட்பாளர் அசோகனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பொது மக்களிடம் பேசிய வேட்பாளரா மருத்துவர் அசோகன் அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை 50,000, கர்ப்பிணி பெண்களுக்கு 18,000 போன்ற என்னற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.இந்த வாக்கு சேகரிப்பின் போது மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் லலிதா சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story