திங்கள்சந்தை பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

X
வாக்கு சேகரிப்பு
திங்கள்சந்தை பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.
கன்னியாகுமரி பராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நாசரேத் மாவட்டம் முழுவதும் முக்கிய தலைவர்கள் பிரமுகர்கள் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று கன்னியாகுமரி (கி) மாவட்ட கழக செயலாளர்,கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் திங்கள்சந்தை பகுதியில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் இரட்டைஇலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான பச்சைமால் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
