புறாவை பறக்க விட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!
அதிமுக வேட்பாளர்
நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக ஆக்கியது அதிமுக தான், பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர் பரீட்சை எழுத கால் சென்டரும் அக்னி ஆற்றில் இரண்டு பாலங்களும் நான் வெற்றி பெற்ற பிறகு முதல் வேலையாக அமைத்து தருவேன் என திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா புதுக்கோட்டை மாவட்டம் மன விடுதி கிராமத்தில் புறாவை பறக்கவிட்டு வாக்கு சேகரித்தார்.
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ப.கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் மனவிடுதி கிராமத்தில் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அப்பொழுது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து மலர்களால் வரவேற்பு அளித்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட வேட்பாளர் கருப்பையா, பின்னர் பொதுமக்களிடம் பேசும் பொழுது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மற்ற வேட்பாளர்கள் வருவார்கள் போவார்கள் அதன் பின் இங்கு வரக்கூட மாட்டார்கள் மனவிடுதி என்ற ஒரு கிராமத்தையே மறந்து விடுவார்கள்.
ஆனால் நான் அப்படி இல்லை உங்கள் வீட்டுப் பிள்ளை தங்கள் ஊரில் நடக்கும் எந்த ஒரு விழா இருந்தாலும் முதல் நாளாக நிற்பேன், நின்று கொண்டிருக்கின்றேன். அது போல் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் குறித்தது அதிமுக ஆட்சியில் தான் தற்பொழுது இப்பகுதி மக்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் கிராமத்தில் கால் சென்டர் ஒன்று வேண்டும் அதேபோல் அக்கினி ஆற்றில் இரண்டு பாலங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர் .
நான் வெற்றி பெற்ற பிறகு முதல் வேலையாக இவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவேன் ஆகவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றியை பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் முன்னதாக சமாதான புறாவை பறக்கவிட்டு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்ச்சியில் அதிமுக பொறுப்பாளர்கள் ஒன்றிய கழக வட்ட செயலாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.