ஆர்த்தி எடுத்தவர்களுக்கு பணம் வழங்கிய அதிமுக வேட்பாளர்
ஆர்த்தி எடுத்த மக்கள்
சிவகங்கை அருகே ஆர்த்தி எடுத்தவர்களுக்கு பணம் வழங்கிய அதிமுக வேட்பாளரால் பரபரப்பு.
சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் களைகட்டியுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரத்தில் கையில் கட்சி கொடி, சின்னத்துடன் வீதிவீதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு முன்பே உள்ளூர் கட்சிகாரர்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தரப்படுகிறது. அவர்கள் முக்கிய பிரமுகர்களை வரவேற்க கையில் ஆரத்தி, கும்பம், பூக்களுடன் வரிசையாக காத்திருக்கும் நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியர் தாஸ் சிவகங்கை அருகே உள்ள கொட்டக்குடி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது அவருக்கு அதிமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுப்பவர்களுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி தட்டுக்கு 50 ரூபாய் என பணம் கொடுத்து சென்றனர். பணம் கொடுத்ததை கண்டு கொள்ளாமல் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு செல்லும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story