6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் !
அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ ஆறாவது நாளாக காலையும் மாலையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து இன்று காலை முதல் பெரம்பூர் ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அந்த வகையில் இன்று மாலை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு பகுதி 71 வது வட்டம் பெரம்பூர் அம்பேத்கர் சிலை தொடங்கி, 71 வது வட்டம் ஸ்டேட் பேங்க் காலணி வரை பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் தொடக்கத்தில் பழக்கடையில் பழங்களை விற்பனை செய்து வாக்கு சேகரித்தார், தொடர்ந்து பெரம்பூர் பாரதி ரோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது அங்கு ஒருவர் வீட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பேசியதில்லை, மூத்த அரசியல்வாதிகளையும் தராதரம் இல்லாமல், வயதிற்கு மீறிய பேச்சு பேசுகிறார்.
அதற்கு பெயர் தருதல, ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன், அதுபோல தான் உதயநிதி பேசி வருகிறார். 6 லட்சம் வாக்குவித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என உதயநிதி தெரிவித்த நிலையில் அதிமுக வேட்பாளர் மனோ 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறினார். வசைபாடி விரட்டி அடிக்கப்பட்டு துரத்தியடிக்கும் நிலையில் தான் திமுகவினர் உள்ளனர், ஊடகங்களில் பார்க்க முடிகிறது கலாநிதி வீராசாமி, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன் எல்லாம் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். பணத்தை கொடுத்தால் வாக்களித்து விடுவார் என்று நம்பி கொண்டிருக்கிறார்கள். இதற்கு தக்க பதிலை ஏப்ரல் 19ஆம் தேதி மக்கள் அளிப்பார்கள்.
எங்களைப் பொறுத்தவரை பாஜக வாக இருந்தாலும் கடுமையான விமர்சனம் வைக்க தான் செய்கிறோம், தவறு செய்தால் சுட்டிக்காட்டி கண்டிக்க தான் போகிறோம் அதற்கு தயங்கியது இல்லை. தோழமையில் இருந்த போதும் கூட நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க செய்திருக்கிறோம். திமுக என்றாவது மாநில உரிமைக்காக நீதிமன்றம் சென்று இருக்கிறார்களா? பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன் என்ற வகையில் தான் திமுக உள்ளது. எழுதப்படாத ஒப்பந்தம் திமுகவுக்கும் நம் மீனவர்கள் சுதந்திரமாக அச்சுறுத்தல் இல்லாமல் இலங்கை கடற்படை தாக்குதல் இல்லாமல் கைது செய்யாமல் சுதந்திரமாக தொழில் செய்ய ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தவில்லை அதை தவற விட்டு விட்டார்கள், மத்திய அரசு நினைத்தால் கச்சத்தீவை மீட்கலாம். இந்தியாவின் ஒரு பகுதி தமிழ் நிலத்தின் ஒரு பகுதி கச்சத்தீவு இதனால் நம் எல்லை குறைந்து விட்டது மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
யாருக்கும் அக்கறை இல்லை அவர்கள் 17 ஆண்டுகள் இருந்தும் கோட்டை விட்டுவிட்டார்கள் இவர்கள் இருந்தும் கோட்டை விட்டு விட்டார்கள் இப்போது தேர்தலில் மீனவர்கள் ஓட்டு வேண்டும் அதற்காக பேசுகிறார்கள் அவர்களுக்கு மீனவர்கள் ஓட்டு கிடைக்காது. நாய் ஓநாயும் ஆகலாம் சிங்கமாக முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து கருத்து குறித்த கேள்விக்கு, கட்சிக்காரர்களின் ரத்தத்தை உறிஞ்சி அம்மாவின் பெயரைச் சொல்லி செய்த அட்டூழியம் எத்தனை கட்சிக்காரர்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் தெரியுமா? உண்டு கொழுத்த நண்டு பேசுவதற்கு தகுதி இல்லை என்று பதிலளித்தார்.