தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை இன்று நடக்கிறது.
இது தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து குமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமாரகுரு தலைமை வைக்கிறார். துணைச் செயலாளர் மகேஷ் வரவேற்கிறார். திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் மகேஷ், துணைத் தலைவர் சதீஷ், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் செல்லப்பெருமாள், இணைச் செயலாளர்கள் ஷாஜி கண்ணன், டேவிட் சந்தோஷ், கந்தன் முன்னிலை வகிக்கின்றனர். ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ சிறப்புரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், எதிர்வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.