அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
புதுக்கோட்டை நகராட்சி இயல்பு கூட்டத்தில் புதுக்கோட்டை நகரில் வசிக்கும் பொது மக்களுக்கு 15 நாளைக்கு ஒரு தடவை குடிநீர் வழங்குவதை கண்டித்தும் அதிமுக ஆட்சியில் மகளிர் கலை கல்லூரிக்கு எதிரே பூங்கா அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு அதற்கு ஒன்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வேலைகள் முடிவற்ற நிலையில் திமுக ஆட்சி பதவியேற்று மூன்று ஆண்டுகள் கழித்து அதில் வேறு எந்த வேலையும் பார்க்காமல் கலைஞர் பூங்கா என பெயர் வைத்ததை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடியார் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். கொண்டு வந்தது மட்டுமல்லாது அதற்கு முறையாக நிதி ஓதுக்கி பல்வேறு பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை நகராட்சி இயல்பு கூட்டம் நடைபெற்றது அப்பொழுது புதுக்கோட்டை நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் குறைந்தபட்சம் நான்கு நாளைக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது ஆனால் திமுக அரசு பதவி ஏற்று மூன்றாண்டுகள் ஆகி தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது இதனால் பொதுமக்கள் சொல்லன்னா துயரத்தில் உள்ளனர். அதேபோல் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரே ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதய தமிழக முதல்வர் எடப்பாடி யாரின் ஆணைக்கிணங்க ஒன்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை கையகப்படுத்தி பூங்கா அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பதவி ஏற்றது அதிமுக ஆட்சியை காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை முடக்கி வைத்தது மட்டுமல்லாமல் இந்த பூங்காவை ஏதோ இவர்கள் முடிவேற்றது போல் ஒரு பிம்பம் காட்டி அதனை கலைஞர் பூங்கா என பெயர் மாற்றம் செய்து அதனை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தனர் இந்த இரண்டையும் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் இன்று வெளியிடப்பு செய்தனர் நகராட்சி முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவரும், புதுக்கோட்டை நகராட்சி கவுன்சிலரும், புதுக்கோட்டை அதிமுக தெற்கு பகுதி செயலாளர் SAS அப்துல் ரகுமான் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.