அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஒன்றிய செயலாளர்கள் வாக்கு சேகரிப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ராஜ் ஆகியோர் தலைமையில் காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம், புல்லூர், எஸ்.கல்லுப்பட்டி, மந்திரி ஓடை, காரியாபட்டி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அஇஅதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யக்கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் பேசுகையில், அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். மேலும் காரியாபட்டி நகரம் வளர்ச்சி அடைந்து வருவதால் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், காரியாபட்டியில் இருந்து திருச்செந்தூர் ராமேஸ்வரத்திற்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், குரூப் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு இலவச பயிற்சி மையம் அமைத்துக் கொடுப்பேன் என்றும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்காளர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து உறுதியளித்தார்.
ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விடியா திமுக அரசு ரத்து செய்து விட்டது என்றும், கடந்த சட்டசபைத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு தற்போது வரை மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்த வில்லை என்றும் வேட்பாளர் திமுக அரசை சாடினார். மேலும் கடந்தமுறை திமுக கூட்டணி எம்பி வேட்பாளர் நவாஸ்கனி யை கண்டா வரச் சொல்லுங்க என்று இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போஸ்டர் ஒட்டும் நிலையில் தான் திமுக கூட்டணி எம்பி நவாஸ்கனி உள்ளார்.
மேலும் திமுக அரசின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். மேலும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி மற்றும் புரட்சித்தமிழர் ஆகியோரின் ஆசி பெற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை அளித்து தன்னை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
மேலும் பிரச்சாரத்திற்கு சென்ற இடமெல்லாம் அஇஅதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, கே.கே.சிவசாமி, வழக்கறிஞர் ஆவியூர் ரமேஷ், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.