தேர்தல் சுவர் விளம்பரங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் சேர்க்கும் பணி துவக்கம் !

தேர்தல் சுவர் விளம்பரங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் சேர்க்கும் பணி துவக்கம் !
X

அ.தி.மு.க

தேர்தல் சுவர் விளம்பரங்களில் வேட்பாளர் பெயர் சேர்க்கும் பணி துவங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து கட்சியினர், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியின் கூட்டணி முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. வேட்பாளர்கள் தேர்வு ஓரிரு கட்சியில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதர கட்சியில் பேச்சுவார்த்தை மற்றும் நேர்காணல் நடந்து வருகிறது. இருப்பினும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. அதில் வேட்பாளர் பெயர் மட்டும் எழுதாமல் விடப்பட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க. சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடவுள்ளார் என, அ.தி.மு.க. பொதுச்செயலர் அறிவித்துள்ளார். அதனால் வேட்பாளர் பெயர் இல்லாத சுவர் விளம்பரங்களில் வேட்பாளர் பெயர் எழுதும் பணி துவங்கியுள்ளது.

Tags

Next Story