அதிமுக பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை

அதிமுக பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை

அதிமுக ஆலோசனை கூட்டம்

அதிமுக பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் ,வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். முன்னாள் தமிழர் வீட்டு வசதி வாரிய தலைவரும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி .கே. வைரமுத்து முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர், கழக விவசாய பிரிவு செயலாளர் ராஜமாணிக்கம் பேசுகையில் நான் நகர செயலாளராக இருந்து பின்னர் மாவட்ட அளவில் பொறுப்பாளர் பெற்று இன்று கழக விவசாய பிரிவு செயலாளர் வந்திருக்கின்றேன் அதற்கு காரணம் உழைப்பு அதிமுகவில் கடின உழைப்பு செய்பவர்களுக்கு பதவி தேடி வரும் என்பதில் ஐயமில்லை அதேபோல் நான் தேர்தலில் நின்று சொர்ப்ப ஓட்டுகளில் தான் வெற்றி பெற முடியவில்லை அதற்கு காரணம் நூற்றுக்கம்பட்டி சரியான முறையில் தன்னுடைய பணியை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் ஆகவே இந்த பூத்து கமிட்டியை நாம் சிறப்பாக நடத்தி அதிமுகவை தொடர்ந்து வெற்றி பெற செய்ய இந்த பூத் கமிட்டி முக்கியம் என பேசினார் இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான சதன் பிரபாகர் பேசும் பொழுது தற்பொழுது அமைக்கப்பட பூத்து கமிட்டியானது இந்த தேர்தல் மட்டுமல்லாது அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் ஆகவே நீங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி யாரை ஆக்குவது நம் லட்சியமாக உறுதி பூண்டு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார் முன்னதாக பேசிய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட புதுக்கோட்டை மாவட்டம் தான் அதிக அளவு உறுப்பினர் சேர்த்த மாவட்டமாக உள்ளது. அதேபோல் வருகின்ற தேர்தல்களில் அதிக வெற்றிகளை கொடுத்த மாவட்டமாக திகழ்ந்து முதன்மை இடத்தை பெற வேண்டும் என பேசினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ் ஏ எஸ் .சேட்டு என்ற அப்துல் ரகுமான் மற்றும் புதுக்கோட்டை நகர வடக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story