நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர்

அதிமுக பொதுக்கூட்டம்

10 கோடி கையெழுத்துக்கள் வாங்கினாலும் நீட் தேர்வை ரத்து நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில்,அதிமு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு செஞ்சி நகரசெயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோவித்தசாமி வரவேற்றார் ஒன்றிய செயலாளர்கள் சோழன், புண்ணியமூர்த்தி, அருந்தத்தன், அளந்தபுரம்பேரூராட்சி செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் சி.வி. சண் முகம் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாயினுக்கு மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு போக வேண்டும் அதை செய்யாமல் பத்து கோடி பேரிடம் கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, அகில இந்திய கோட்டாவில் தமிழகத்தில் மருத்துவ சீட்டுகள் நிரப்பப்படாமல் உள்ளது செப்டம்பரில் இதற்காண காலக்கெடு முடித்து விட்டது. இந்த சீட்டை நிரப்புவதற்கு தி.மு.க. மட்டுமின்றி இங்குள்ள தேசிய கட்சியின் தலைவரும் என்ன செய்தனர் என கேள்வி எழுப்பினர், கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு ரவுடிகளுக்கும் கொள்ளையர்களுக்கும் தைரியத்தை கொடுத்தது யார், நேரடியாக குற்றம் சாட்டுகிறோம். இதற்கு காரணம் தி.மு.க.மற்றும் அதன் அமைச்சர்கள் தான் என கூறினார், இதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Tags

Next Story