சேலம் : அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தின ஆலோசனை கூட்டம்
அதிமுக ஆலோசனை கூட்டம்
நிர்வாகிகள் பலர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்
எம்.ஜி.ஆர். 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜூ, சக்திவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கி பேசுகையில், வருகிற 24-ந் தேதி காலை 9 மணி அளவில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் 60 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். வருகிற 26-ந் தேதி சென்னையில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஜான் கென்னடி, பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சரவணன், சண்முகம், மாரியப்பன், பாலு, முருகன், ஜெயபிரகாஷ், சேலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story