அ.தி.மு.க. நிர்வாகி கொலையில் மேலும் ஒருவர் கைது !

அ.தி.மு.க. நிர்வாகி கொலையில் மேலும் ஒருவர் கைது !

கைது

சேலத்தில் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் தொடர்ந்து தலைமறைவு.

சேலம் அ.தி.மு.க. நிர்வாகி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தி.மு.க. பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவர் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அ.தி.மு.க. பகுதி செயலாளராக இருந்தார். மேலும் 2 முறை கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவராகவும் இருந்தார்.

இவரை 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 3-ந்தேதி இரவு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலைகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சண்முகம் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த கொலையில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கிச்சா என்ற கிருஷ்ணன் (53) என்பவரை நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாரிடம், கிருஷ்ணன் கூலி வேலை செய்து வந்தார்.

அப்போது கொலையான சண்முகம் எங்கெல்லாம் செல்கிறார், எப்போது வீட்டிற்கு வருகிறார். இரவு எத்தனை மணிக்கு வீட்டிற்கு செல்கிறார் என்ற தகவல்களை சதீஷ்குமாரிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் கொலை செய்வார்கள் என்பது தெரியாது என்று கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமி உள்பட மேலும் 3 பேரை தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story