அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு!
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகில் தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங் ஏற்பாட்டில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், எலுமிச்சை ஜூஸ், தா்பூசணி ஜூஸ், உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.