எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாள் விழா

எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாள் விழா

குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தூத்துக்குடியில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினர்.

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான சுதாகர் ஏற்பாட்டில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், பரிசு பெட்டகமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு , மாவட்ட கழக துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கனேஷ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், ஆத்தூர் நகர செயலாளர் சோமசுந்தரம், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story