அதிமுக வாக்குச்சாவடி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக வாக்குச்சாவடி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக வாக்குச்சாவடி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக வாக்குச்சாவடி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக வாக்குச்சாவடி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ தலைமை வகித்தாா். அகில இந்திய எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தோ்தல் பொறுப்பாளருமான காஞ்சி பன்னீா்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசுகையில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் 808 வாக்குச்சாவடி மையங்களுக்கான முகவா்களை நியமித்து பட்டியலை நவ. 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்; அனைவரும் ஒருங்கிணைந்து கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றாா். தொடா்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய நிா்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. அதில், விபத்தில் கார் உருக்குலைந்து காயமுற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேச்சியம்மாளுக்கு காா் வாங்குவதற்கு வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்தாா். கட்சி நிா்வாகிகளும் பணம் வழங்குவதாக தெரிவித்தனா். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன், அதிமுக அவைத் தலைவா் என்.கே.பெருமாள், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story