அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் !!

அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் !!

நலத்திட்ட உதவிகள்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 70-வது பிறந்தநாளை முன்னிட்டு,1000 மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் நடைபெற்றது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குழி பேரூராட்சி, மேலவளம்பேட்டையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 70-வது பிறந்தநாளை முன்னிட்டு,1000 மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு திருகழுக்குன்றம் S.ஆறுமுகம் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு பெரும்பாக்கம் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி, பொதுமக்களுக்கு சேலை, காலை உணவு போன்றவற்றை வழங்கினர்.

இந்நிகழ்வின் போது கழக மாநில அணி நிர்வாகிகள், ஒன்றிய குழு பெருந்தலைவர், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story